அறிமுகம் - பொட்டல்புதூர் கிராமம்
பொட்டல்புதூர் - கிராமத்திலும் சேர்த்துக் கொள்ள முடியாத, நகரம் என்றும் ஏற்றுக் கொள்ள இயலாத பல சிறு கிராமங்களையும் உள்ளடக்கிய தலையாய பெரும் கிராமம்.
தமிழ்நாடு - திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் தாலுகா, கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிக்கு உள்பட்டது பொட்டல்புதூர்.
தென் மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து 23 மைல் தொலைவில் - கேரளா மாநிலத்தை நோக்கிச் செல்லும் பாதையில் - தெற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் பொட்டல்புதூர் கிராமம் உள்ளது.
எல்லா மதத்தவர்களையும் ஏற்றுக் கணிசமான மக்கள் தொகையை கொண்டுள்ளது. இவ்வூரில் மதக்கலவரம்-சாதி இனத் தகராறு என்பது மிக அரிது. இங்கு மதவெறிக்கு எவரும் உரம் போடுவதில்லை. மாறாக மதவெறி தளிர்க்காமல் வெண்ணீர் ஊற்றி வேர்கள் அழிக்கப்படும்.
பல்சமயத்தவர்களும் குடியேறி நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழும் பொட்டல்புதூர் மக்களின் சமூகத் தலைவர்களும் பிரிவினைப் பாராட்டாமல் செயல்படுபவர்கள். தவறுகளைப் புறக்கணித்து- விட்டுக் கொடுப்பதில் பெருன்தன்மையுடையவர்கள்.
ஊர் நலம் விரும்பி குடிமக்களின் இணங்கிய செயல்பாடுகளையும், பொது மக்களை வழி நடாத்துவதில் தலைவர்கள் கை கோர்த்துக் கொள்வதையும் பொட்டல்புதூர் வாழ் மக்களின் தனிச் சிறப்பு என்று கூறலாம்.