சட்ட மன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டன!

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.

(சற்று பழைய செய்தி)

மாலைமலர்

Labels: ,


 

நெல்லை மாவட்டத்தில் 46,000 வாக்காளர்கள் நீக்கம்.

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இல்லை.

தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்கக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 11 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை புகைப்பட வாக்காளர் பட்டியலில் 17.36 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலில் 46,629 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆண்களும், 8 லட்சத்து 58 ஆயிரத்து 351 பெண்களுமாக மொத்தம் 16 லட்சத்து 90 ஆயிரத்து 217 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்களை விட 26 ஆயிரத்து 485 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த பட்டியலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிகபட்சமாக 18,000 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 224 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்களர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் விபரங்கள்:

சங்கரன்கோவில் தொகுதியில் 2,490 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 701 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 2,885, தென்காசி தொகுதியில் 1,165, ஆலங்குளம் தொகுதியில் 821, நெல்லை தொகுதியில் 13,570, பாளையங்கோட்டை தொகுதியில் 18,612, சேரன்மகாதேவி தொகுதியில் 1,681, அம்பாசமுத்திரம் தொகுதியில் 224, நாங்குநேரி தொகுதியில் 949, ராதாபுரம் தொகுதியில் 3,531 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரே மாவட்டத்தில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Labels: ,


 

சிங்காரப் புன்னகை...

குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல


நன்றி: தினமணி மருத்துவ மலர் 2003

டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன்
நரம்பு-உளவியல் மருத்துவ நிபுணர்,
சென்னை.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே'


என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். "என்னங்க பெரிய கலை; அறிவியல் - அந்தக் காலத்திலே எங்க தாத்தாவுக்கு 10 பிள்ளைகள். டாக்டர், வக்கீல்னு எல்லோரும் நல்ல நிலையிலேயே இருங்காங்க. என்கூடப் பிறந்தது 8 பேரு. நாங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்கோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி குழந்தை வளர்ப்பு சவால் அது இதுன்னு சொல்லிகிட்டு என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.

உண்மைதான். அந்தக் காலத்தில் ஏராளமான பிள்ளைகளை பெற்று நன்முறையில் வளர்த்தனர். ஆனால் இன்று காலம் மாறிப் போச்சு. வாழ்க்கை முறை மாறிப் போச்சு. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான்.

"ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்'. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் 5 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்து 2-வது குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகளுக்கு மிதமிஞ்சி செல்லம் கொடுக்கிறார்கள். சக்திக்கு மீறி செலவும் செய்கின்றனர். இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இப்படி இஷ்டம் போல் வளர அனுமதித்துவிட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது முரண்டு பிடிக்கிறது.

இந்த அவசரகதி உலகத்தில் குழந்தை வளர்ப்பு பிரச்சினையாகி உள்ளது.

குழந்தைகள் வளர்ப்பு குறித்து விரிவான தகவல்கள்:-

பிரச்சினை எங்கே தொடங்குகிறது?

"அலுவலகத்தில் சோர்ந்து திரும்பிய மனைவி சாப்பாடு தயார் செய்யும்போதுதான் "அம்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடு' என்று குழந்தை கேட்கும். "என்னங்க கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடுக்கக் கூடாதா' என்று மனைவி கேட்க, "எனக்கு வேறு வேலை இல்ல பாரு' என்று கணவர் உறும அங்குதான் உரசல் ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் குழந்தையும் முரண்டு பிடிக்கும். இதனால் அம்மா தனது ஆத்திரத்தை, இயலாமையை குழந்தையிடம் வெளிப்படுத்துவாள். இந்த கலாட்டாக்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.

உணர்ச்சிகளைச் சமநிலையில் (உம்ர்ற்ண்ர்ய்ஹப் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங்) வைத்து நிதானமாகச் செயல்படும் தன்மை பெரும்பாலான பெற்றோருக்கு இல்லை. எதிர்ப்பு இருக்காது. திருப்பிப் பேசாது என்ற தைரியத்தில் நமது ஆத்திரம், கோபம், இயலாமையை குழந்தைகளிடம் காட்டுகிறோம். நமது கோபத்தின் வடிகால் நமது குழந்தைகள் அல்ல.

குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவது இல்லை என்ற குறை பரவலாக உள்ளதே?
"என் குழந்தைக்கு பால் இல்லைன்னா எதுவுமே வாய்க்குள்ள இறங்காது. டாக்டர் அவன் சாதமே சாப்பிடுறது இல்லை டாக்டர். இப்படி புலம்பும் அம்மாக்கள் பலர். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதை குழந்தை சாப்பிட்டுப் பழகும். அந்தந்த காலகட்டம், வயதுக்கு ஏற்ப எல்லா உணவுகளையும் கொடுத்துப் பழக்கவேண்டும்.

"ஐயோ என் குழந்தைக்கு அது சாப்பிட்டா பிடிக்காது, இது சாப்பிட்டா பிடிக்காது' என்று நாமே தடுத்துவிடுகிறோம். நாம் கொடுப்பதில்லை. சாப்பிடவில்லையா விட்டுவிடுங்கள். பசி வந்தால் தானாகச் சாப்பிடும். நிறைய நொறுக்குத் தீனி கொடுத்து பழக்கிவிட்டு பிறகு சாப்பிடவில்லை என்று புலம்புவதில் பலன் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முறையான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

டாக்டர், 10 வயசாகுது - இன்னும் நான்தான் ஊட்டி விடவேண்டியதிருக்கு - இது பல பெற்றோரின் புலம்பல். சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். குழந்தை தானாகச் சாப்பிடும். ஒரு நாள் அடம் பிடிக்கும்; இரண்டு நாள் அடம் பிடிக்கும். நீங்கள் உறுதியாக இருந்தால் வழிக்கு வரும். எதையும் கேட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகள் தவறு செய்யும் நிலையில் கண்டிக்கலாமா? அடிக்கலாமா?

கண்டித்தே ஆக வேண்டும். ஆனால் கண்டிக்கும் அணுகுமுறையில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் சங்ஞ்ஹற்ண்ஸ்ங் இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் செய்கிறோம். பாலைக் கொட்டிவிட்டால் "ஏய் சனியனே நீ எதுக்கு அதைப் போய் தொட்டாய்' என்று எரிந்து விழுவதற்குப் பதிலாக "பால் கொட்டிருச்சா, சரி பரவாயில்லை, இனி பார்த்து, கவனமாக இருக்கனும் சரியா, என்று கனிவு கலந்த கண்டிப்போடு சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை பாலை எடுக்கும்போது குழந்தை கவனமாக எடுக்கும். எதையும் பாசிட்டிவாக அணுகுங்கள். தவறை உணர வைக்க (தங்ஹப்ண்ள்ங்) வேண்டும். அதைவிட்டு கத்துவதால் எந்தப் பலனும் இல்லை.

அடம் பிடிக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தை அடம் பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அடித்து, உதைத்து நம் வீர - தீரத்தைக் காட்டுகிறோம். சரி, அடிக்காவிட்டால் குழந்தை அடங்குமா என்று கேட்பீர்கள். "சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தை கேட்கும். கஷ்டப்பட்டால்தான் நாம் எதையும் அடைய முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணர்த்துங்கள்.

100 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரியவையுங்கள். நமது வாங்கும் சக்தி இவ்வளவுதான். நமது எல்லை எதுவரை என்பதை குழந்தை தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் அடிப்பதுபோல் மிரட்டவேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த நிமிஷத்திலேயே அன்பாகப் பேசி, அரவணைத்து, இப்படிச் செய்யலாமா? என்று பேசி தவறை உணரவைக்கவேண்டும்.

பொத்தி பொத்தி வளர்ப்பது (Over Protection) சரியா?

இந்தப் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆளுமை, தைரியம் குழந்தைக்கு வேண்டும். என் குழந்தையை சின்ன வேலையைக் கூட செய்ய விட்டதில்லை. அவனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று பெருமை பேசும் அம்மாக்கள் உண்டு. பொத்திப் பொத்தி வளர்ப்பதால் வளர்ந்த பிறகு தனித்தன்மையோடு செயல்படும் திறன் இருக்காது. குழந்தைக்கு எல்லாவற்றையும் பழக்குங்கள். அவன் வேலையை அவனே செய்ய அனுமதியுங்கள். அப்படிச் செய்ய சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் எதிர்கால போராட்டங்களைச் சந்திக்கும் மனபக்குவம் வளரும்.

நன்றாகப் படிப்பதில்லையே?

படிப்பு என்றாலே வேப்பங்காயாகக் கசக்கிறது. எங்களுக்காகப் படிக்கிறான். ஆனா அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார். அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. படிப்புன்னா வேப்பங்காயா கசக்கிறது. இது பெற்றோர் பலரின் புலம்பல். குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை. பள்ளியில் இருந்து வந்தவுடன் குழந்தைகளிடம் பாசமாகப் பேசி இளைபாற விடுங்ள். விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்.

முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் காது கொடுங்கள். கண்ணா படிப்புதான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை 50 மதிப்பெண் வாங்கியிருந்தால். பரவாயில்லடா கண்ணா 50 மார்க் வாங்கி பாஸ் செய்திருக்க, அடுத்த முறை 80 மார்க் வாங்கனும், உன்னால முடியும். "படிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சினை' என்று கனிவோடு அணுகுங்கள்.

குழந்தையின் சின்ன, சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது படம் வரைந்தால் அதைப் பாராட்டுவதை விட்டு சனியன் படிக்க துப்பு இல்லை, படம் வரையறான் என்று திட்டி குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதில் அவன் திறமையை வளர்ப்பதற்கு உதவுங்கள்.

என் மகன் டாக்டராக வேண்டும் என்று நினைப்பதில் தவறு என்ன?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள். அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள்.

5 விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் க்ண்ள்ஹக்ஷப்ண்ற்ஹ்) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் "நம்பர் ஒன்' ஆக்குங்கள். அதைவிடுத்து அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.

நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் சொல்கின்றனர்.

நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.

குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.

தனித்துச் செயல்பட...: எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. ஆனால் நாம்தான் "என் செல்லத்தால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முடியுமா? என்று கூறி எதையும் செய்யவிடுவதில்லை. தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும். அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள்.

குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் - மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.

பருவ வயது பிரச்சினைகளைச் சமாளிக்க வழி என்ன?

பருவ வயது மிகவும் ஆபத்தானது. நமது குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டிய காலம் அது. செலவு செய்ய ரூ. 100 கேட்டால், நியாயமாகப்பட்டால் கொடுங்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். கணக்கு கேளுங்கள். பெண் - ஆண் நட்பு தவறில்லை. ஆனால் எல்லையைச் சுட்டிக்காட்டுகள்.

ஆரோக்கியமான செக்ஸ் கல்வி அவசியம். நமது குழந்தை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதே நேரத்தில் ஏமாந்துவிடக் கூடாது. நாம் குழந்தை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குழந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறையும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டி நெறிகள் சொல்லப்படுகின்றன அவை:

குயவர் (Potter): பெற்றோர் தொழில் திறன் மிக்க குயவர் போல் செயல்படவேண்டும். மண்ணைப் பிசைத்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று சமூகத்துக்குப் பயன்தரக் கூடிய சிறந்த குடிமகனாக குழந்தையை வளர்க்க வேண்டும்.

தோட்டக்கரார் எஹழ்க்ங்ய்ங்ழ் மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி காய் காய்த்து கனி கிடைப்பது போல் குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும் வளம் தரக்கூடிய சத்துப் பொருள்களை வழங்கவேண்டும். அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை நீக்கி ஒரு தோட்டக்காரர் போல் பெற்றோர் செயல்பட வேண்டும்.

வழிகாட்டி: குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக நல்ல ஆசானாக இருந்து நல்லது எது - கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை. விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒட்டி வாழும் தன்மை ஆகியவற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அதே வேளையில் நமது விருப்பு - வெறுப்புகளை அவர்களிடம் திணிக்கக்கூடாது.

ஆலோசகர்: குழந்தைக்கு நல்ல ஆலோசகராக இருக்கவேண்டும். நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும். உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றி - தோல்வி கையாளும் பக்குவம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுங்கள்.

ரோல் மாடல் (தர்ப்ப் ஙர்க்ங்ப்): உங்கள் குழந்தையின் நல்லது. கெட்டது எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் குழந்தையும் சிகரெட் பிடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குழந்தையும் பொய் சொல்லும். மொத்தத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் ரோல் மாடல். அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தவறுகளை, குறைகளைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை இச் சமூகத்தை வழி நடத்தும் குழந்தையாக வளரும்.

Labels: ,


 

முஸ்லிம் மாணவர்களுக்கு அரவு உதவி!

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்

B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B. Tech.,B.D. S.,M.B.B. S.,M.S.,M. D.,M.E.,M. S.W.,M.Tech. ,M.C.A மற்றும் Professional/ Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.

இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs .gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002

மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசியில் தொடர்பு கெள்ளவும்.

சமுதாய ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007

Labels: ,


 

உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்!

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி.

உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்.

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ளதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

Labels: ,


 

நெல்லை மாவட்டத்தில் மழை.

களக்காடு, நவ. 11-

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் அணைகளில் நீர் கிடு கிடுவென உயர்ந்து வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி பகுதியில் அதிக பட்சமாக 65.5 மி.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலையில் 136 மி.மீ. மழை யும் பதிவாகி உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 129.20 அடியாக இருந்த பாப நாசம் அணை நீர்மட்டம் 130 அடியாகவும், 73.25 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாகவும் உயர்ந்துள்ளது.

கருப்பாநதி அணை பகுதி யில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62.27 அடி யாக இருந்தது. இன்று காலை 3 அடி உயர்ந்து 65.29 அடியாகி உள்ளது. அணைப்பகுதியை பொறுத்த வரை பாபநாசம் அணையில் 45 மி.மீ. மழையும், கீழணையில் 70 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 73 மி.மீ. மழையும், சேர்வலாறில் 24 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதர பகுதி களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ராதாபுரம்- 19

நாங்குநேரி- 65.5

அம்பை- 25

ஆலங்குளம்- 20.2

சிவகிரி- 54.2

தென்காசி- 23.3

நெல்லை- 16.4

திருச்செந்தூர்- 3.2

காயல்பட்டினம்-32

குலசேகரப்பட்டினம்-26

விளாத்திகுளம்-20

காடல்குடி- 7

சூரங்குடி- 30

வைப்பார்- 12

கோவில்பட்டி- 30

கயத்தார்- 37

கடம்பூர்- 51

கழுகுமலை- 136

ஓட்டப்பிடாரம்- 17

மணியாச்சி- 62

கீழஅரசடி- 2

எட்டயபுரம்- 9

சாத்தான்குளம்-15.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் ரோடு களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இதனால் அங்குள்ள கால்வாயிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கால்வா யில் களக்காடு-சிதம்பராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாலம், கீழ கருவேலங்குளம்- மஞ்சுவிளை செல்லும் வழியில் உள்ள பாலம் ஆகிய 2-ம் வெள்ளத்தில் மூழ்கின.

இதனிடையே நாங்குநேரி யன் கால்வாயில் கருப்பசாமி கோவில் அருகே திடீர் என்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ள நீர் அங்குள்ள சர்ச் தெரு, நகர தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய தெருக் களை மழை நீர் சூழ்ந்தது.

சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

இதனிடையே களக்காடு விநாயகத்தான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வயல் வெளிகளில் தேங்கியது. தாமரைகுளமும் உடையும் நிலை ஏற்பட்டுள் ளது.

வெள்ளம் பாதித்த இடங்களை களக்காடு ïனியன் சேர்மன் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.

சிங்கையில் கடந்த சில நாட் களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் தெருக் களில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது.

நீர்பிடிப்பு பகுதியான காரையார்-சேர்வலார், மணி முத்தாறு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளன. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நெல்லை, நவ. 11-

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அணை நீர்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன்கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்டு இருப்பது 2-வது முறையாகும்.

Labels:


 

மறுமொழிகள் :
மறுமொழி சோதனைக்காக
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் இன்று வெளியான ஒரு கவிதை...

அன்புடையீர்!

வனக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த "சொல்வேந்தர் குழு" நிகழ்ச்சி ஒன்றில் "இல்லத்தரசிகளுக்கு விடுமுறை ஏன் கொடுப்பதில்லை?" என்ற தலைப்பில் ஒரு மணித்துளி என்னைப் பேச அழைத்த போது..விடுமுறை வேண்டுமென்பதற்காகவே நான் வேலைக்குப் போகாமல் இல்லத்தரசியாக இருப்பதாகக் கூறினேன்...

அன்று எழுதிய கவிதை இது..

கடந்த எழுத்துக்கூடச் சந்திப்பின் போது ஒரு தருணத்தில் திருமதி. ஜெயந்தி பாலமுகுந்தன் அவர்கள் பெண்கள் வேலைக்குப் போனதும் நிறைய மாறிவிட்டது என்று கூறினார்கள்...அப்போது இக்கவிதை நினைவுக்கு வந்தது..எழுத்துக்கூடத்தில் பதிவிட எண்ணினேன்..

அயல்நாட்டில், குறிப்பாக இங்கே வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இதுதான்..விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்...(இந்தியாவில் நிலைமை சற்றுத் தேவலாம் என்பது என் கருத்து)

பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பதல்ல கருத்து...அவர்கள் சந்திக்கும் இழப்புகளே கவிதையின் வழக்கு...

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

என் தலையைக்
கோத நேரமில்லாத நிலை..
பிள்ளை தலைவாரிப்பூச்சூட்டிப்
பாடசாலைக்கு அனுப்புவதென்பது
கனவாகிப் போனது..

வாய்க்கு ருசியாகச்
சமையல் செய்து
வருடங்கள் ஆகிவிட்டது..
லக்கி கஃபே தோசை
முனைக்கடை ஷவர்மா
பழகிப் போய்விட்டது..

அனலாய்க் காயும் காய்ச்சல்
பிள்ளைக்கு என்றாலும்
தனியாய்த் தவிக்க விட்டுவிட்டுக்
கடமைக்காய் மருந்து கொடுத்துக்
கடமைக்காக விரையத்
தாய்மனம் தயாராகிவிட்டது...

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து
அலுத்து விட்டது
விசேட வகுப்புகளில்
மாலையிலும் வீடு
மாணவர்களால் நிறைந்திருக்க..
தயங்கித் தயங்கி ஐயங்களோடு
காத்திருந்து காத்திருந்து
என் பிள்ளை தூங்கியே போய்விட்டது...

பள்ளியில்கூட
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
மும்மாதம் ஒருமுறை..
இங்கு கணவன் மனைவி சந்திப்பு
பெற்றோர் பிள்ளைகள் சந்திப்பு..
வருடத்தில் எப்போதோ சிலமுறை..

கணவன் கூட மணிக்கணக்காய்ப் பேசி
மாதங்கள் பல ஆகிவிட்டது..
பிள்ளைகளைக் கொஞ்சிப் பேசி
வாரங்கள் பல ஆகிவிட்டது
வார இறுதிகளிலும்
விருந்து கடைகள் ...
நடனம் பாட்டு என்று
பிள்ளைகளின் வகுப்புகள்...
போதும் போதும் என்றாகிவிட்டது..

கவிதை எழுத,ரசிக்க,
கைவேலை தையல் செய்ய
இன்னிசை ரசிக்க
சுஜாதா பாலகுமாரன்
வரிகளில் லயிக்க.......
நேரமின்றிப் போனது

தேவைகளின் அழைப்பில்
சேவைகள் செயலிழந்து போனது

மாத இறுதியில்
கைகளில் கிடைக்கும்
பணத்தின் கனத்தில
மனதின் கனம்
கொஞ்சம் மயங்கிவிட்டது

ரியால்களை ரூபாயாக
மாற்றி மகிழும்
Money கணக்கில்
மணிக்கணக்குகள்
தொலைந்த கதை
மறந்தே போய்விட்டது...

அன்புடன்,
மலர்.

Labels: ,


 

தாய்பால் அறிவுக்கு ஆரோக்கியம்.

குழந்தைகளை அறிவுஜீவிகளாக்கும் தாய்ப்பால்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007

லண்டன்: புட்டிப் பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளே நல்ல அறிவுஜீவிகளாக வளர்வதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தாய்ப்பாலில் உள்ள சிறப்பு வகை கொழுப்பு அமிலங்கள், புட்டிப் பாலில் இருப்பதில்லை. இதன் காரணமாக, தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகள், புட்டிப் பாலை குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

ஐ.க்யூ அளவில், புட்டிப் பால் குடித்து வளரும் குழந்ைதகளை விட இந்தக் குழந்தைகளுக்கு 7 புள்ளிகள் அதிகம் இருக்கிறதாம்.

தாய்ப்பாலில் உள்ள FADS2 என்ற புதிய வகை ஜீன்தான், குழந்தைகளின் புத்திசாலித்தனம், ஆரோக்கியம், மகிழ்ச்சித்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்தில், 7, 9, 11 மற்றும் 13 வயது கொண்ட 1037 குழந்தைகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு 18 வயதானபோது அவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த 2232 இரட்டையர்களின் ஐ. க்யூ அளவும் சோதிக்கப்பட்டது. அவர்களின் ஐ.க்யூ அளவு 5 ஆக இருந்தது.

இரு பிரிவு குழந்தைகளுக்கும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டபோது, தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ஐ. க்யூ அளவு 7 புள்ளிகள் அதிகம் இருந்ததாம்.

தாய்ப்பாலில் மட்டுமே பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பசும்பாலில் இது இல்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு அமிலங்கள்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொழுப்பு அமிலங்கள்தான் நரம்பின் மூலம் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. மேலும் நரம்பிழைகளின் வளர்ச்சியையும் இந்த கொழுப்பு அமிலங்கள்தான் தூண்டுவிக்கின்றன.

புத்திசாலித்தனத்திற்கும், தாய்ப்பாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல் முறையாக 1929ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ஆதாரப்பூர்வமாக மீண்டும் உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுத்தால் இளமையும், அழகும் குறைந்து போய் விடும் என்ற கருத்து உள்ள இன்றைய இளம் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு நிச்சயம் கண்களைத் திறந்து விட உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

Labels: