வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு
பாவூர்சத்திரம்-வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007
பாவூர்சத்திரம்: கலங்கலான குடிநீரை குடித்ததால் பாவூர்சத்திரம் அருகே 100க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூர், மாடியனூர், பொடியனூர், சின்னநாடானூர், கோட்டைவிளையூர், ராயாப்பநாடானூர் ஆகிய ஊர்களில் வாந்தி மற்றும் பேதி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவுடையனூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த ஊரைச் சேர்ந்த செல்வி, மாரிச்செல்வி, அரிதாஸ், பாலகன், திலகா, சுதா, ஜெயராணி ஆகியோரும் பொடியனூரை சேர்ந்த செல்லக்கனி, கோட்டைவிளையூரை சேர்ந்த ஜெயராஜ், சுடலைமணி நாடார் மற்றும் மாடியனூரை சேர்ந்த தங்கராஜா உள்பட பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தாமிராபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்கப்ட்டு வருகிறது. குடிநீரால் தான் வாந்தி, மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிக்சை பெறுவோர் கூறியதாவது, தாமிராபரணி தண்ணீர் கலங்கலாக வருகிறது. குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்தால் அடியில் மண் உறைகிறது. இந்த தண்ணீரால் தான் இப்பகுதியில் வாந்தி, பேதி பரவுகிறது என்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Labels: குடிநீர், கேடு, சுகாதாரம்
தென்காசியில் கனமழை
நெல்லையில் பலத்த மழை: பள்ளிக்குள் வெள்ளம்- மாணவிகள் அவதி
வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் தென்காசியில் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்ததால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 5 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில், தென்காசியில் கன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்தது.
பள்ளி சற்று தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நீர் வடிகால் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் 2,100 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மழை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் 24 வகுப்பறைகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கன மழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு:
நெல்லையில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் மணிமுத்தாறு அணை 3 அடி உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 78 மி.மீ மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு,
செங்கோட்டை-78, அம்பாசமுத்திரம்-40, நாங்குநேரி-28, பாளையங்கோட்டை-28.2, ராதாபுரம்-50, சங்கரன்கோவில்-57.3, தென்காசி, சிவகிரி-65.2, திருநெல்வேலி-12.2, ஆலங்குளம்-17.34 என பதிவாகியுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைபகுதிகளில் விடிய விடிய மழை பெய்ந்துள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையில் 119.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 120.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1,698 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் திறநது விடப்படுகிறது.
மேலணையில் 68 மீ.மீ, கீழணையில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 20 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 71 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அணைக்கு விநாடிக்கு 27.73 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதியில் 52 மி.மீ, ராமநதியில் 17 மி.மீ, கருப்பாநதியில் 35 மி.மீ. குண்டாறில் 12 மி.மீ, அடவிநாயினார் அணையில் 31 மீ.மீ, நம்பியாறில் 10 மி.மீ, கொடுமுடியாறில் 20 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

நெல்லை செய்தி
நெல்லை பைபாஸ் ரோட்டில் ரூ.16 கோடியில் புதிய மேம்பாலம்
வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007
நெல்லை: நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.16 கோடியில் பைபாஸ் ரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நெல்லை மேயர் ஏ.எல் சுப்பிரமணியன் கூறியதாவது,
நெல்லையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இதனால் நெல்லை மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வண்ணார்ப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
இதனை பரிசீலித்த முதலமைச்சர் கருணாநிதி கடந்த முறை நெல்லை வந்தபோது வண்ணார்பேட்டை பைபாஸில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், நிதிதுறை செயலாளரை நான் அடிக்கடி சந்தித்து பேசினேன்.
பின்னர் மேம்பாலம் அமைக்க ரூ.17.75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதையடுத்து முக்கிய செலவினங்களை தவிர சிலவற்றை குறைத்து பாலம் அமைக்க ரூ.16.40 கோடி ஆகும் என முடிவு செய்யப்பட்டது.
தற்போது பாலம் அமைக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுமதி ஆகியவை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து துவங்கும் இந்த மேம்பாலம் மறுபுறம் எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி அருகே முடிவடைகிறது. இது இரண்டு வழிப்பாதையாக அமைக்கப்பட்டாலும் போக்குவரத்தை கணக்கில் கொண்டு நான்கு வழிப்பாதையாக மாற்றலாம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக 'வெள்ளம்' - மக்கள் அவதி!
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2007
திருநெல்வேலி: நெல்லையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான திமுகவினரால் நகரின் பெரும் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
நெல்லையில் நேற்று தொடங்கிய திமுக இளைஞர் அணி மாநாட்டையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர்.
பேரணியில் மட்டும் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேரணியின்போது முருங்காக்குறிச்சி சிக்னல் முதல் நெல்லை ரயில் சந்திப்பு வரையிலான பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில இடங்களில் திமுகவினர் சாலையில் செல்ல முயன்ற இருசக்கர வாகனங்களை அடித்து தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட வந்த மற்ற திமுகவினர், தகராறில் ஈடுபட்ட திமுகவினரை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
பெரும் திரளான தனியார் பேருந்துகள் தவிர ஏராளமான அரசுப் பேருந்துகளிலும் திமுகவினர் வந்திருந்ததைக் காண முடிந்தது. பேருந்துகளின் உள்ளேயும், மேலேயும் பெரும் திரளான திமுகவினர் அமர்ந்து வந்தனர்.
பேரணி வரும் பாதையில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களும் மதியத்திற்கு மேல் மூடப்பட்டு விட்டன. அந்தப் பாதையில் உள்ள பல ஹோட்டல்களும் கூட வேகம் வேகமாக மூடப்பட்டு விட்டன.
மாநாடு மற்றும் பேரணியால் நெல்லை நகரில் திருவிழா உற்சாகம் காணப்பட்டாலும், பலர் அவஸ்தைப்பட்டதையும் காண முடிந்தது. வெளியூர்களிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நெல்லைக்கு வந்த பலரால் நகருக்குள்ளேயே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் பெரும் அதிருப்தியும், அவஸ்தையும் அடைந்தனர்.
கருணாநிதிக்கு கருப்புக் கொடி - 4 பேர் கைது
முன்னதாக நெல்லைக்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீஸார் முக்கிய இடங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கு. சண்முகநாதன் & திருச்சுழி
நல்லவர். பெரும் தொகை தனக்குக் கைக்கு (2 கோடி) வந்தபோதும் கட்சிக்குக் கொடுத்தவர். ஒரு மாலைப் பொழுதில் எங்கள் ஊர் கம்யூனிஸ்ட் ஆபிஸ் வாசலில் இவரை பஞ்சாயத்து தலைவர் சுடலைமுத்து நம்பியார் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அம்பை சட்டமன்றத் தொகுதியில் தீட்சதரை எதிர்த்துபோட்டி போட்டு இருக்கிறார். இவரால் பல விவசாயக் குடும்பங்களுக்குக் கிடைத்த நன்மை ஒன்று உண்டு. கடனாநதி இராமநதி இவைகளெல்லாம் காங்கிரஸ் காலத்தில் கட்டப்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆம்பூர், ஆழ்வை, பொட்டல், கடையம் வட்டாரப் பகுதி விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு இவர் நடத்திய போராட்டத்தின் விளைவுதான்.
இன்று கடனாநதியிலிருந்து தென்காசிக்குக்கூட தண்ணீர் குடிக்கக் குழாய் மூலம் போகிறது. இந்த வட்டாரத்தில் விவசாய நிலங்கள் பூத்துக்குலுங்குகின்றன என்றால் அதற்குக் காரணம் தோழர் நல்ல கண்ணுதான். நானும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழிகள் :
<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்
ஐயா வணக்கம்.
கட்டுரைய படிக்கும் போது சந்தோஷமா இருக்கு. நல்லகண்ணு எனக்கும் வேண்டியவர்தான். நீங்க குறிப்பிட்டிருக்கிற சுடலைமுத்து நம்பியார் எங்க தாத்தா.
Post a Comment
கட்டுரைய படிக்கும் போது சந்தோஷமா இருக்கு. நல்லகண்ணு எனக்கும் வேண்டியவர்தான். நீங்க குறிப்பிட்டிருக்கிற சுடலைமுத்து நம்பியார் எங்க தாத்தா.
<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்
எழுதிச் செல்லும் விதியின் கை!
முடவன் குட்டி
Thinnai 2000 June 11
சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது. எங்கிருந்தோ ஒலிப்பதாய் காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு வர, தூக்கம் சுத்தமாய்ப் போய்விட்டது.
'ச்சே... ' படுக்கையை விட்டு வெடுக்கென எழுந்து உட்காருகிறேன். பீடி தேடி, தலையணைக்குக் கீழே கை போகிறது. தீப்பெட்டி... ? ராத்திரி நடந்த யுத்தத்தில் அதனையும் மறந்திருக்கிறேன். தீப்பெட்டி சமையலறையில் இருக்கும். எழுந்து கதவைத் திறந்து முற்றத்தில் இறங்கிய போது, குளிர்ந்த காற்று முகத்தில் அறைகிறது. சமையலறைக் கதவு திறந்திருக்கிறது. சின்ன விளக்கின் மங்கலான ஒளி லேசாய் அசைகிறது. மூலையில் அம்மா படுத்திருக்கிறாள். தீப்பெட்டி தேடுகையில் விழித்துக் கொண்டாள் அம்மா. ஏதோ முனகினாள். எரிச்சலாய் வந்தது. 'ஏம்மா... காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டியா ? '
'என்னல ஆரம்பிச்சேன்... ஒளிஞ்சு போலாம்னா சாவு வரமாட்டேங்குதே... வூட்டு நரகத்திலே கெட-ன்னு அந்த ரப்பு எழுதிட்டானே... '
'சரி... சரி பேச்சை நிறுத்து. எளவெடுத்த பேச்சு... '
'....ஆமல. நான் எளவெடுத்துப் போயிடறேன்... நீயும் ஒம் பொண்டாட்டியும் வாழுங்கலே... ஏல வாப்பா... நிதானமா இருல.. துள்ளித் துடுச்சு தூளாப் போவாதல_ '
'ஏ செத்த சவம். இப்போ சும்மா கெடக்கிறியா இல்லையா...! '
அவ்வளவுதான். படுத்திருந்தவள் ஆக்ரோஷமாய் எழுந்துவிட்டாள். 'யாரப் பார்த்துல சும்மா கெடக்கச் சொல்ற... கால நீட்டி படுத்துறங்குதா பாருல... ஒம் பொண்டாட்டி.... அந்த செருக்கியப் போயி சும்மா கெடக்கச் சொல்லுல... வார்த்தைகள் சீறிச்சினந்து செவிப்பறையைக் கிழித்து நெஞ்சைச் சுட்டுக் குதறின. ரத்தம் கிர் ரென தலைக்கேறி, கண்கள் வெறியாய்க் கொப்பளிக்க, 'கிழவி' ஒனக்கு இம்புட்டு ஆங்காரமா... ஒங்காலை முறிச்சு கையிலே விலங்கு போடுறேனா இல்லியா பாரு... '.
எட்டி ஓர் உதை. 'ஐயோ கொல்றானே... ' அலறியபடி, கீழே சாய்ந்தாள் அம்மா. விழுந்து கிடந்த அம்மாவிடம் பேச்சில்லை. அசைவில்லை. பதறிப்போய்... 'ம்மா... ம்மா... ' என்கிறேன். நெற்றியைத் தடவிப் பார்க்கிறேன். தோளைத் தொட்டு உசுப்புகிறேன். கையைப்பற்றி தூக்க அது 'தொப் ' பென விழுகிறது.
அம்மா... அம்... மா... அடிவயிற்றிலிருந்து பிளிறிக் கிளம்பும் உயிரின் குரல், 'பக் ' கென நெஞ்சுக்குழி அடைக்க, நரம்பில் , ரத்தத்தில், கைதலத்தில் , கண்ணில், காதுகளில் பீதி பரவிற்று. கழுத்து நெறிபட மூச்சு திணறிற்று.
பாய்ந்து ஒரே தாவு. முற்றத்தைத் தாண்டி படுக்கை அறை வாசலில் விழுகிறேன். வியர்த்து விறுவிறுக்க உடல் நடுங்குகிறது. மனைவி புறண்டு படுக்கிறாள்.
'வேண்டாம்... சொல்ல வேண்டாம்... யாருக்குமே... ' கொடியில் தொங்கும் சட்டை, வேஷ்டி துண்டு... துணிப்பைக்குள் திணிக்கிறேன். பணம்.. ? மூச்சை ஆழமாய் உள் இழுத்து 'தம் ' பிடித்து, அரிசிப் பானையைத் துளாவ... மனைவியின் சங்கிலி, காப்பு. சட்டைப் பையில் கொஞ்சம் சில்லறை இருக்கிறது. போதும். மெல்ல அடிவைத்து முற்றத்திற்கு வருகிறேன். அ... விளக்கு அணைஞ்சு போச்சா... ஒரே இருட்டா இருக்கே... கொல்லைப் புறக் கதவை மெதுவாக திற... திறந்து...
ஓடு... ஓடு... வெறிக்கொண்ட நாயைப் போல ஓடுகிறேன். சேறும் சகதியுமாய் குளத்து ஓடை. ஒரு கால் சகதிக்குள். வெளியே இழு... இழுத்து... அ... அந்தப் பூவரச மரத்துக்குப் பின்னால் ஒளிந்து, சட்டையைப் போட்டு கொள்ளலாம். மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறேன். குறுக்குப் பாதையில் சென்றால், யாருக்கும் தெரியாது. மெயின் பஸ் ஸ்டாண்டுக்கும் போக வேண்டாம். ரோட்டிலேயே கை காட்டி பஸ்ஸை நிறுத்திக் கொள்ளலாம். முதலில் ஊரைவிட்டு நகர்ந்து விடணும். அப்புறம் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிடணும்.
எங்கிருந்தோ, இருளைக் கிழித்து வந்த ஆந்தையின் அலறல், குரல் மாற்றி மாற்றி தலைக்குள் பெரிதாய் ஓலமிடுகிறது. மூச்சு நடுநடுங்க வேகமாய் நடக்க ஆரம்பிக்கிறேன். வேகம், நடையை விரட்ட ஓட்டமாய் ஓடுகிறேன். இருட்டு... வானத்தில் ஒரேயொரு நட்சத்திரம். அதுவும் என்னோடு... என்னைத்துரத்திக் கொண்டு வருவதாய்... ஐயோ... இது என்ன... ? சரல்கற்களும். மேடு பள்ளங்களும்... ? வண்டிப் பாதையை விட்டுவிட்டேனா... ? முட்செடியின் கிளையொன்று கன்னத்தை விளாறி, சட்டையைக் கிழித்துவிட்டது. கன்னத்தைத் தடவ பிசுபிசுப்பு. ரத்தம். கால்கள் தாவித்தாவி ஓடுகின்றன. தெவங்கித் தெவங்கி மூச்சு வாங்குகிறது. வாய் பிளந்து காற்றை உள் இழுக்கிறேன். மார்கழிக்குளிர் காற்று, கொஞ்சம்... உட்கார்ந்து... அப்புறம் செல்லலாம்... காற்று பலமாய் வீசுகிறது. மழை வருமோ... ? குவிந்து, குவிந்து, சுழித்து, சுழித்து 'ஹ்உ ஹ்உ ' - வென காதுக்குள் ஓலமிடுகிறது காற்று. வெலவெலத்துப் பயந்து குப்புற விழுகிறேன். நாக்கு, குடல் ஒட்டி உலர்ந்து போவுதே... குடிக்கத் தண்ணீர். தண்... எழுந்து ஓடுகிறேன். சுண்ணாம்புக் காள்வாய் எதிரே குளம். ஆடு, மாடு குளிப்பாட்ட-மலம் கழித்தபின் கால்கழுவும் குளம். தாகம். அள்ளி அள்ளிக் குடிக்கிறேன். தீரவில்லை குனிந்து, கைகளை தலையில் ஊன்றி, வாயால், ஒரு மிருகத்தைப் போல் குடித்து தீர்க்கிறேன். அப்பாடா... குளத்தை ஒட்டி மெயின்ரோடு.
கண்களைக் குருடாக்கும் வெளிச்சத்தை வாரி இறைத்தவாறு- அதோ பஸ். 'சடாரென ' நிற்கிறது.
'எளவெடுத்த மூதேவி. நடுரோட்டுலேயா நின்னு கை காட்டுவாக... ஏறு. வேய்... ஏறு. ஏய்யா பேயடிச்ச மாதிரி பாக்கேறு... பஸ் மேலே ஏறுச்சுன்னா என்ன ஆவும் தெரியுமா வேய் ? நீரு நிம்மதியாப் போய் சேர்ந்திருவீரு. என் வேலை போயிடும் வேய். சரி சரி... எங்க போவணும்... எங்க வேய்... ? பொட்டல் புதூரா... ? எடும்... துட்டெடு வேய்... '
பொட்டல் புதூர்னு, அவனே சொல்றானே... இந்த பஸ், த்ருவா பொட்டல் புதூருக்கே போவுதுபோல... அதுவும் நல்லதுதான். பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், பாத்திஹா ஓதிவிட்டுப் போய்விடலாம். பின் ஸீட்டில் , மூலையில் அமர்கிறேன். மழைக்காக சுருட்டி வைத்திருந்த கான்வாஸை, கீழே இழுத்துவிடுகிறேன். ஸீட்டில் படுத்தவாறு சாய்ந்து, கால்களை முன்னால் நீட்டி கொள்கிறேன்.
'அ...ம்...மா '- உயிர்ச்சுடர் உள்ளே, ஆழத்திலிருந்து கதறிற்று. துண்டை வாயில் திணித்து, பொங்கிப் பொங்கி அழுகிறேன். 'அம்மா-எப்பவாவது உன்னை வாயாற அம்மா-ன்னு கூப்பிட்டிருப்பேனா... ? ரத்தம் தெறிச்சுப் போக, ராப்பகலா தறி நெய்து என்னைக் கண்ணுலவச்சு வளத்தியே... ஐயோ... அம்மா... ஒன்ன இனிமே பார்க்கவே... முடியா...
முன்ஸீட் கம்பியில் படார் படாரென, தலை மோத , பஸ் நிற்கிறது. கண்டக்டர் அருகே வந்து, மேலும் கீழும் முறைக்கிறான். துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறேன். 'ரைட் ' 'ரைட் ' - கண்டக்டர் கத்துகிறான். டிரைவரும், அவனும் ஏதேதோ பேசிக்கொள்கின்றனர். காதோடு சேர்த்து, துண்டை தலையில் கட்டிக் கொள்கிறேன். கண்கள், மூட...
அம்மா... அம்மா நீ பட்ட கஷ்டத்துக்கு, உன்னைப் பூவா வச்சிருக்கணும்... அப்படித்தான் நினைச்சேன்... கல்யாணமாச்சு. புதுசா வந்த பொஞ்சாதிக்கு முதல் குறி, புருஷனைப் பெத்தவதான். அவளிடமிருந்து புருஷனை பிரிச்சிரணும். அது வரைக்கும் ஓயமாட்டா... மருமவ நினைப்பெல்லாம், மாமியார்க்காரிக்கு 'பளிச் 'னு தெரியும். இவளை அவ மறிப்பா. அவளை இவ நெரிப்பா. இந்த திணறல்ல அம்மா, என்னிடமிருந்து விலகி போயிட்டா... ரொம்ப தூரம். வீட்டில் யாரும் அம்மாவுடன் பேசுவதில்லை. என்னிடம் மட்டும் வலிஞ்சு, திரும்பத் திரும்ப பேசுவா. ஒம் பொஞ்சாதி அதெச் சொல்றா... இதெச் சொல்றா... என. நான் அதுக்கெல்லாம் பதில் சொல்றதே இல்லை. வெறுப்புன்னு ஒண்ணுமில்லே. சண்டையை விசாரிக்க ஆரம்பிச்சா நதிமூலம், ரிஷிமூலம்தான். ஜீவனம் கழியாது. ஆனா அம்மா, காத்திருந்தா. எப்பவாவது அவளை நான் அம்மா-ன்னு கூப்பிடுவேன்-னு. அது நடக்கல. அப்படியே பழகிப் போச்சு. ஆச்சு... பத்துவருஷம். அம்மா தன்னை கொண்டு ஒதுங்கிட்டா. வீட்ல யாருமே இல்லாதபோது, ஒரு திருடியைப் போல வருவா... சோறோ... சோளக் காடியோ... தானா எடுத்து வச்சு வெங்காயத்தைக் கடிச்சுகிட்டு சாப்பிடுவா...
நேற்று ராத்திரி... எங்கோ வெளியில போயிட்டு, பத்து பத்தரை மணி வாக்கில வீட்டுக்கு வந்தா அம்மா. சோறு இல்லை. பானையிலே தண்ணி ஊத்தி வச்சிருக்கு. பேச ஆரம்பிச்சா பொஞ்சாதி சும்மா இருப்பாளா... ? எதிர்ப்பேச்சு. பேச்சு வளர்ந்து, இவள் தலைமயிரைப் ப்ற்றி அவள் உலுக்க, அவளின் மூஞ்சியைப் பிராண்டித் துப்பினாள் இவள். பக்கத்துவீட்டு ஆயிஷா, எதிர்த்தவீட்டு மைமூனு- என கும்பல்கூடி, சமாதானம் செய்யும் சாக்கில், சண்டையை அணு அணுவாக ரசித்து, ருசித்து பருகிக் கொண்டிருந்தபோது நான் வந்தேன். இருவரையும் விலக்கினேன்.
'எனக்கென்ன தெரியும்... ? 'அது ' சாப்பிட்டிருக்கும்-ன்னு நினைச்சு, புள்ளைக்கு ஒரு வாய் ஜாஸ்தி சோறு போட்டேன்... ' - என்றாள் மனைவி.
நான் பொன்னுவிலாஸ் காபிக் கடையில, இட்லி வாங்கிவந்து, அம்மா முன்னால் வைத்தேன். அவள் இட்லியைத் தொடவே இல்லை. தூங்காம, ரொம்ப நேரம் அழுது புலம்பிக் கொண்டே இருந்தாள். காலையில் பீடிக்குத் தீப்பெட்டி தேடும்போது ஒப்பாரி வைத்ததால், அவளை காலால் எ...த்...தி...
'வேய் தூங்குறீரா... எறங்கும். பொட்டல்புதூர் வந்தாச்சு வேய்... '- கண்டக்டர் உசுப்ப, தட தடவென கீழே இறங்குகிறேன். எதிரிலேயே பள்ளிவாசல். அண்ணாந்து பார்க்கிறேன். பார்வை போகுந்தூரம் வளர்ந்தவாறு மேலே மேலே போயிற்று பள்ளிவாசல் மினாரா. மெல்ல நடக்கிறேன். புறாக்கள் முகத்துக்கு நேரே மறிப்பது போல, மாறி மாறிச் சிறகடிக்கின்றன. படி தாண்டி, பள்ளிவாசலுக்கு உள்ளே, கல்தரையில் கால்வைக்க, 'சுரீல் ' என ஏதோ ஒன்று, கால்நுனிவழியே மேலேறி, கபாலத்தை தாக்கிற்று. தலை தாழ, கூனிக் குறுகியபடி. மனித உருவங்கள் ஆங்காங்கே திட்டுதிட்டாய் உறைந்து கிடக்கின்றன. எத்தனையோ மனிதர்களின் உள்மன ரகஸ்யங்களை, காலா காலமாய் உறிஞ்சி உள்வாங்கிக் கொண்ட ஊழிக்காற்று தலைக்குமேல் சுற்றிச் சுற்றி வருகிறது. உள் பள்ளி வாசலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் சுடரை எதேச்சையாய்ப் பார்க்கிறேன். ஐயோ... இது என்ன தீ ஜ்உவாலை என் கண்ணுள் தகிக்கிறதே... 'அம்மா... உன்னைக் கொன்னுட்டேன்... கொலை செஞ்சுட்டேன்... '
வெடித்துச் சிதறிய குரலில், பள்ளிவாசல் கட்டிடமே கிடுகிடுத்து நடுங்கிற்று.
பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், இவன் உயிரை மாய்த்துக் கொண்ட கோரத்தைச் சொல்ல, ஓடிவந்தார் அப்துல்லா மாமா. அன்று காலை மயங்கிவிழுந்து, உடனே தெளிந்தும் விட்ட, இவன் அம்மா அலறினாள். ' வாப்பா... எம்புள்ளே... போயிட்டியாடா மவனே... '

Labels: குடும்பம், தாய். மகன்
அணுசக்தி ஒப்பந்தம்!
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு
டெல்லி மேல்-சபையில் கனிமொழி முதல் பேச்சு
பிரதமர் பாராட்டு

புதுடெல்லி, டிச.5-
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சில் கூறினார். இந்த பேச்சுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. நேற்று முதல் முறையாக டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சின் போது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்து பேசியதாவது:-
கன்னிப்பேச்சில்
நான் இந்த அவையிலே அடக்கத்துடனும், நம்பிக்கையுடனும் பேச எழுகிறேன். என்னுடைய இந்த கன்னிப்பேச்சில், மதிப்பு மிகுந்த இந்த அவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தம் குறித்து நான் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பில் கருத்துக்கூறும் வாய்ப்பினை பெற்றமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.
இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பதோடு ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.
சிலர் இது முறையற்ற ஒரு சார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்க ஏடுகளுக்கு அளித்த ஒரு பேட்டியில் அமெரிக்காவின் சார்புச் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ், "இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை அமெரிக்கா, உலகில் உள்ள வேறு நாடுகளோடு செய்து கொள்ளாது. இந்தியா மட்டும் விதிவிலக்கு'' என்று கூறியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக
இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும், இதில் உள்ள நுணுக்கங்களையும் பார்க்கும்போது, மக்களிடையே இது குறித்த சந்தேகங்களும், பல்வேறு கேள்விகளும் எழுவது நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் சில நியாயமானவையாகவும், சில அரசியல் காரணங்களுக்காகவும் உள்ளன.
நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில், எங்கள் கட்சியின் தலைவர் கலைஞர், இந்த 123 ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்க செய்துவிடக்கூடாது. நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் நம்புகிறார்.
நமக்கு 2020-ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் மெகாவாட் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால் இந்த 123 ஒப்பந்தம் ஏற்பட்டிருக்காவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.
எனவே நாம் யுரேனியம் போன்ற அணுசக்திப் பொருட்களை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதற்கு பலகாலம் பிடிக்கும்.
முதல் அடி வைக்க
புளூட்டோனியத்தை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தற்போதுள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தியைவிட முப்பது மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நாம் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.
சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால் அவற்றால் நமக்குத் தேவையான அளவிற்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நான் இது போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை நமக்கு தேவையான அளவில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.
உணவு உற்பத்தி பாதிக்கும்
தற்போது கரும்பிலிருந்து உற்பத்தியாகும் எத்தனால் போன்ற பொருட்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உலகத்தில் உள்ள உழக்கூடிய நிலங்கள் அனைத்திலும் கரும்பை பயிரிட்டாலும் கூட நமக்கு தேவையான மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாது. மேலும், உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்.
2100-ம் ஆண்டு வாக்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்று கருத்து நிலவுகிறது. அதற்குப்பின்னர், நிலக்கரி மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படும்.
அதிக அளவில் நிலக்கரியை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் பூமியின் வெப்பத்திற்கு காரணமாக விளங்குகின்றன.
ஒரு கிராம் யுரேனியம், ஒரு டன் நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஈடு செய்யும். செலவிடப்பட்ட எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து 97 சதவீத எரிபொருளை மீட்டு, மறுபடியும் பயன்படுத்தலாம்.
மின் உற்பத்தி
உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில் நுட்பத்தையும், அதற்கான கச்சா பொருளையும் நாம்பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின் உற்பத்தி தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.
நாம் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், அணுசக்தி வினியோகிக்கும் உரிமை நமக்கு இல்லை. இதன்காரணமாக அணுசக்தி வினியோகிக்கும் 45 நாடுகள் குழுவோடு வணிக ஒப்பந்தம் செய்து கொள்வதில் நமக்கு சிக்கல் ஏற்படும். நம்மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக, நாம் இரு பயன்பாட்டு தொழில் நுட்பத்தை பெறுவதற்கு அனுமதி இல்லாத நிலை இருக்கிறது.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அணுமின் உற்பத்தி குறித்த இந்தியா-பிரான்ஸ் கூட்டுச் சந்திப்பில் அணுசக்தி தொழில்நுட்பத்தை நமக்கு வழங்க இயலாத நிலையை பிரான்ஸ் நாடு தெரிவித்து விட்டது. நம்மோடு மிகுந்த நட்போடு இருந்த ரஷ்யாவும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டிருந்த ரியாக்டர்களை வழங்க மறுத்துவிட்டது.
முதலீடு பயன்படாமல்
பிரதமர் ராஜீவ்காந்தியும்-சோவியத் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவும் 1985-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமக்கு இவற்றை ரஷ்ய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சோவியத் நாடு துண்டுபட்ட பிறகு, ரஷ்யா அணுசக்தி வினியோகிப்போர் குழுவில் இணைந்து கொண்டது. ஆகவே அவர்கள் நம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கடைபிடிக்க முடியவில்லை.
இதன்காரணமாக கூடங்குளம் அணுமின் உற்பத்தி திட்டம் தாமதமாகிறது. மத்திய அரசின் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு பயன்படாமல் இருக்கிறது.
அணுசக்தி வினியோகிக்கும் நாடுகளோடு நாம் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமானாலும், நாம் நம்முடைய அணு ஆயுத கொள்கையினை விட்டுக் கொடுப்பதாகும் என்ற கருத்தும் கூறப்படுகிறது. நம்முடைய அணுசக்தி திறமைகளை கொண்டு ஆயுத உற்பத்தி செய்யும் முயற்சி எளிதில் ஏற்பட்டதல்ல. 1998-ம் ஆண்டில் நாம் மேற்கொண்ட முடிவினை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
பாதுகாப்பில் சமாதானமில்லை
இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும், உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ள தேவையில்லை.
இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில் நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி அணுசக்தி எரிபொருளை வழங்காமல் நிறுத்திவிடவும், அதற்கான கருவிகளை ஓராண்டு கால எச்சரிக்கை வழங்கி, திரும்பப் பெற்றுக்கொள்ளவும் விதிகள் இடமளிக்கின்றன என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும், பிரான்ஸ், கனடா போன்ற இதர நாடுகளோடும் அணுசக்தி வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும் அரசு இந்த அவைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அரசு அறிவிக்க வேண்டும்
மேலும், அமெரிக்கா எரிபொருள் வழங்குவதை நிறுத்திவிட்டால், மற்ற நாடுகளிடமிருந்து நாம் எரிபொருள் பெற இயலுமா என்று இந்த அவைக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் எல்லாம் மிக முக்கியமானவையாக இருந்தாலும், இவை காரணமாக நாம் இதனினும் பெரிய ஆதாயத்தை கருத்தில் கொண்டு நாம் நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை.
இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதீய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது.
ஏழ்மையிலிருந்து விடுவிப்பது
நம்முடைய இந்த வளர்ச்சி திட்டம் என்பது 30 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிப்பது, சாதி மற்றும் பால் வேறுபாடுகளிலிருந்து மக்களை விடுவிப்பது, கிராமப்புற மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த அவையில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எங்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் பேரறிஞர் அண்ணா, சீனப்படையெடுப்பின்போது ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள்காட்டி எனது உரையினை நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாக்க உருவாகியுள்ள கவுரவப் பட்டியலில் தி.மு.க.வின் பெயரையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.
மன்மோகன்சிங் பாராட்டு
டெல்லி மேல்-சபை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழியின் உரையை அனைவரும் ரசித்துகேட்டனர். இவர் உரையாற்றி முடிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் கனிமொழியின் பேச்சை உடனடியாக பாராட்டினார். மிகச்சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுக்கள் என்று ஒரு சீட்டில் எழுதி தனது பாராட்டுக்களை பிரதமர் மன்மோகன்சிங், கவிஞர் கனிமொழியிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி கபில் சிபல் நேரில் கைகுலுக்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த் சர்மா, பட்டேல், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மேல்-சபை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. எம்.பி.க்களும் பாராட்டினார்கள்.

6 அடி உயரத்துக்கு மின்வேலி!
களக்காடு மலையடிவாரத்தில் 8 கிலோ மீட்டர் தூரம்
6 அடி உயரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது
புலிகள் சரணாலய துணை இயக்குனர் பேட்டி
களக்காடு, டிச.5-
தோட்ட பயிர்களை மிருகங்கள் அழிப்பதை தடுக்க களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மின்வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த மின்வேலி 6 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது என்று புலிகள் சரணாலய துணை இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.
விலங்குகள் அட்டகாசம்
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த சில வருடங்களாக காட்டு மிருகங்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தது. காட்டு யானை, மிளா, பன்றி, கரடி போன்ற மிருகங்கள் கூட்டம் கூட்டமாக விவசாய விளைநிலங்களில் புகுந்து வாழை, நெல், தென்னை, பனை போன்ற பயிர்களை நாசப்படுத்தி வந்தன.
இதை தடுக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, காட்டு விலங்குகளால் அதிகப்படியாக விளைநிலங்கள் பாதிக்கப்படும் இடங்களை தேர்வு செய்து சோலார் மின்வேலி அமைக்க அரசு முடிவு செய்தது.
மின் வேலி
அதன் அடிப்படையில் களக்காடு அருகே உள்ள பத்மநேரி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சவிளையில் உள்ள வடக்கு பச்சையாறு அணைவரை 2 கிலோமீட்டர் தூரத்திலும், அதே போன்று வடகரையில் இருந்து தலையணை பகுதி வரை 3 கிலோமீட்டர் தூரமும், திருக்குறுங்குடி சரகத்தில் மலையடிபுதூர் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திலும் மொத்தம் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது.
ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் மொத்தம் 8 கிலோமீட்டருக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் செலவில் காட்டு மிருகங்கள் பயிர்களை தாக்காதவண்ணம் மின்வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அதிகாரி பேட்டி
இதுகுறித்து களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:-
தற்போது மத்திய-மாநில அரசுகளின் நிதிஉதவி மூலம் களக்காடு மலை அடிவாரத்தில் 8 கிலோ
மீட்டர் தூரம் வரை, காட்டு மிருகங்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைக்கப்படுகிறது. அடுத்த வருடமும் இதேபோன்று நிதிஒதுக்கீடு செய்வதன் மூலம் ஓரளவு பணி நிறைவு பெற்று
விடும்.
இந்த மின்வேலி 6 அடி உயரம் உள்ளது. இதனால் எந்த மிருகங்களும் காட்டைவிட்டு தோட்டங்களுக்குள்ளோ, ஊருக்குள்ளோ வராது. இந்த மின்வேலிகள் சோலார் பேட்டரி மூலம் இயங்குகிறது.
பராமரிப்பு குழு
ஏற்கனவே உள்ள மின்வேலிகளை பராமரிக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். மின்வேலிகள் பராமரிப்புக்கு குழு அமைத்து உள்ளோம். ஒவ்வொரு குழுவும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மின்வேலியை
பராமரித்து கொள்வார்கள்.
இவ்வாறு களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர்
வெங்கடேஷ் கூறினார்.
இதுபற்றி மூன்றடி விவசாயியும், முன்னாள் நகர பஞ்சாயத்து உறுப்பினருமான கே.ராஜேந்திரன் கூறியதாவது:-
இதுபோன்று மின்வேலி எல்லா இடங்களிலும் அமைக்க வேண்டும். விலங்குகள் மின்வேலியை தாண்டி வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர் திருத்தம்!

ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
சென்னை, டிச.5-
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
Labels: சீர்திருத்தம், சுகாதாரம்