பொட்டல்புதூர் தர்ஹாவில் 2 சிறுமிகள் கடத்தல்
வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 8, 2008
கடையநல்லூர்: பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்த சிறுமிகளை கடத்திச் சென்ற மர்ம பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துககுடி அண்ணா நகரை சேர்ந்த ஜாகீர் உசேன்-பாத்திமா தம்பதிக்கு கவுசியா பர்வின், உள்பட 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 10 நாட்களுக்கு முன் பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்தனர்.
அதே போல ஆத்தாங்கரைத் தெருவை சேர்ந்த பீர் மைதீனுக்கு 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களும் குடும்பத்துடன் தர்ஹாவுக்கு வந்தனர்.
நேற்று பிற்பகலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் ஆட்டோவில் பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்தனர். அதில் ஒரு பெண் தர்ஹா அருகே நின்று கொண்டு, எனக்கு குழந்தை இல்லை. எனவே குழந்தை பேறுக்காக தலைபிரவாசத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் வேண்டும். அவர்களை தத்தெடுதது புது ஆடைகள் மற்றும் நகைகள் போட்டு தொழுகை நடத்தி விட்டு பின்னர் அனுப்பி வைப்பதாக கூறிார்.
இதை நம்பிய பீர் மைதீனின் மாமியார், பேத்தி செய்யது பர்வீனை
அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார். அதன்பின் அந்த பெண் ஜாகீர் உசேனிடம் கேட்டு அவரது மகள் கவுசியா பர்வீனையும் அழைத்துச் சென்றார்.
ஒரு மணி நேரத்தில் குழந்தைகளை அனுப்பி விடுவதாக உறுதியும் அளித்தனர். ஆனால் இரவு 10 மணியாகியும் இரண்டு குழந்தைகளும் திரும்பி வரவில்லை. அவர்களது பெற்றொர் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து ஜாகீர் உசேனும், பீர் மைதீனும் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அம்பை டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் விசாரணை நடத்தி சிறுமிகளை கடத்தி சென்ற பெணகளை தேடி வருகின்றனர்.

Labels: கடத்தல், தர்ஹா சிறுமிகள்